Thursday, March 1, 2012

என் உயிர் தோழியை தேடி ..!!!

அந்தி வெயிலின் குணம்
மழைச் சாரலின் சுகம்
இரண்டும் அவள்
மனதைச் சாரும்...!!

அவள் ,இவன் உயிரில்
பூத்த நடப்புச் செடி ...
பூத்த பூவை வேறொருவன்
பரித்த சோகம் ஏனடி ..!??

பிழையே செய்யாமல் இவனை
பிணை கைதியக்கினாள்
குணம் காணமல் அவனை
அவள் மனக்கைதியாக்கினாள் ..!!

நட்பிற்கும் தேவை
முகம் என உணரவைத்தாள்..
நடப்பும் உடல்
நிறம் நாடும் என அறியவைத்தாள்..
இவன் குணத்தை
பிணமாக்கி சிரித்து ரசித்தாள்..!!
தனிமையில் நிறுத்தி
இவன் கண்ணீரை போதையாக்கி ருசித்தாள்.!!

சொன்ன சொல்லு
என்ன ஆச்சு..!!?
கொண்ட சொந்தம்
எல்லாம் எங்கே போச்சு,,??

எனகென்று கவிதை
எழுதி காட்டினாள்- தண்ணீரில் ,
இன்றும் அதை நினைத்து
ஏங்கவிட்டாள் கண்ணீரில்..!!

என் உயிர் தோழியே -நடந்திடு
உன் புதிய நட்பின் கரம் கோர்த்து ,
இன்பமும்,அமைதியும் இணைத்து
என்றும் உன் சொந்தமாய் கொண்டிடு ..!!

பிழை செய்தது நானடி
சோகம் மட்டுமே இவன் சொந்தமடி
கானல் நீரில் மீன் தேடினேன்
காகித பூவில் தேன் நாடினேன்
தனிமையில் உறவாகி
கண்ணீரில் உரையாடுகிறேன் ..!!

உன் நட்பிற்கு கூட இவன்
தகுதி இல்லையோ
உனக்காக இவன் சிந்திய கண்ணீர்
உன் இதயம் தொடவில்லையோ ??!!

நன்றி தோழியே
சில நாட்கள் மட்டுமேனும்
நண்பனாய் இவனை கண்டத்திற்கு

மறக்கும் மனம் உனக்கு
அளித்த இறைவனிடம்
இவனுக்கு ஓர் வேண்டுகோள் ..
எதையும் மறவா
மனம் கொடுத்திடு-இவன்
மரணத்தை மட்டும்
உடனே அளித்திடு ...
அடுத்ததாக ஒரு ஜென்மம்
உண்டெனில்
அப்பொழுதாவது இவன்.......,,

நெஞ்சின் வலியோடு
என் உயிர் தோழியை தேடி
இவனது உயிர்
இன்று
என்றும்..என்றென்றும்...!!!
ஜீவன் 

No comments:

Post a Comment